அன்டி வார்ஹால் எனப் பரவலாக அறியப்படும் அன்ட்ரூ வார்ஹாலா ஒரு அமெரிக்க ஓவியரும், "பாப்" ஓவியக் கல…அன்டி வார்ஹால் எனப் பரவலாக அறியப்படும் அன்ட்ரூ வார்ஹாலா ஒரு அமெரிக்க ஓவியரும், "பாப்" ஓவியக் கலை இயக்கத்தின் முன்னணிக் கலைஞரும் ஆவார். வணிகப் படவரைவாளராக வெற்றிகரமாகத் தொழில் செய்த வார்ஹால், ஒரு ஓவியராகவும், புது முயற்சிகளில் ஈடுபடும் படத் தயாரிப்பாளராகவும், இசைத்தட்டுத் தயாரிப்பாளராகவும் உலகப் புகழ் பெற்றார். இவர் பல்வேறுபட்ட சமூகக் குழுக்களுடனும் தொடர்புகளை வைத்திருந்தார். பொஹீமியத் தெருவாழ் மக்களிலிருந்து, அறிஞர்கள், ஹாலிவூட் பிரபலங்கள், செல்வந்தரான உயர்குடியினர் போன்றவர்கள் வரை பல சமூக மட்டங்களிலும் அவர் ஊடாடினார்.